டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 25,500 மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 25 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அண்மையில் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடந்த மத மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்ட வெளிநாட்டை சேர்ந்தவர்களிடம் இருந்து வைரஸ் தொற்று ஏற்படுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை  பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள  ஏராளமானோருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதனை அடுத்து அவர்கள் அனைவரும்  தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  மேலும் மாநாட்டில் கலந்து கொண்ட 2 ஆயிரத்து 83 பேரும் பட்டியலுக்குள் கொண்டுவரப்பட்டு அவர்களுடன் தொடர்பில் இருந்த 25 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 4  ஆயிரத்து 67 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஆயிரத்து 445 பேர் டெல்லி மாநாட்டில் தொடர்புடையவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version