இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக, காஷ்மீர் எல்லையில் 250க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் நடமாடி வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்தில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்புச் சட்டம் 370-ஐ மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் தன்னுடைய எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த சூழலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து 250க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எல்லைப் பகுதிகளில் நடமாடி வரும் இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாத முகாம்களை அமைத்துள்ள பாகிஸ்தான், இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.