அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தாமிரபரணி, பழையாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 7 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. 48 அடி கொள்ளளவு உள்ள பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் 43 அடியை எட்டியுள்ளதை அடுத்து, அணையின் பாதுகாப்புக் கருதி அதிக அளவுத் தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கனமழையுடன் பலத்த சூறைக் காற்று வீசியதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.