நாகை மாவட்டத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டனர்.
சீர்காழி அருகே வானகிரி கிராமத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் வாந்தி மயக்கம் மற்றும் வயிற்றுப் போக்கினால் அவதிப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாகையில் உள்ள ஐஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவனக்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வரலட்சுமி ஆய்வு நடத்தினார். மணிக்கிராமம் பகுதியில் உரிய உரிமம் இல்லாமல் ஐஸ்கிரீம் நிறுவனம் ஒன்று இயங்கி வருவது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நிறுவனத்தை பூட்டிய மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சீல் வைத்துள்ளார். அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஐஸ்கிரீம்கள் பரிசோதனைக்காக ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.