தமிழகத்திற்கு மேலும் 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்தடைந்தன!!!

கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கூடுதலாக, ஒரு லட்சத்து 50 ஆயிரம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன. தமிழகத்தில் நாள்தோறும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனோ பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை 4 லட்சத்து 21 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்கப்பட உள்ளது. இதற்காக, 10 லட்சம் பிசிஆர் கருவிகளை பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து வாங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக தென்கொரிய நிறுவனத்திடமிருந்து 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, தொடர்ச்சியாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் பிசிஆர் கருவிகள் இன்று தமிழகம் வந்தடைந்தன. வரும் வாரங்களில் மீதமுள்ள 7 லட்சத்து 50 ஆயிரம் பிசிஆர் கருவிகள் வரவுள்ளதாக மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version