குறைந்த செலவில் அதிக லாபம் தரும் கறிவேப்பிலை விவசாயம்

கறிவேப்பிலை விவசாயம், குறைந்த செலவில் அதிக லாபத்தை தருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர், அடுத்த சாணிப்பூண்டி கிராமத்தில் பல ஏக்கர் பரப்பளவில் கருவேப்பிலை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கருவேப்பிலை பயிர் 20 ஆண்டுகள் வரை பயிரிடப்படும் பயிர் ஆகும். மேட்டுப்பாளையத்திலிருந்து கண்ணு வாங்கி வந்து நிலத்தில் 2 அடி இடைவெளிவிட்டு நட்டு 1 ஏக்கருக்கு 6500 கண்ணு வரை நடப்பட்டு 9 மாதம் வரை பராமரித்து வந்த பின்பு அறுவடை தொடங்கப்படுகிறது. கருவேப்பில்லை விவசாயத்திற்கு குறைந்த தண்ணீர், உரம், பூச்சிமருந்து ஆகியவையே போதுமானதாக உள்ளது. தொடக்கத்தில் குறைந்த அளவே லாபம் கிடைத்தாலும் 3 மாதங்களுக்கு பின் கூடுதல் மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

Exit mobile version