பாலாற்றங்கரை நாகரிகம் தொடர்பான நினைவுச் சின்னங்கள் அழியும் ஆபத்துள்ளதாக தொன்மம் வரலாற்று ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளர் வெற்றித்தமிழன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் பாலாற்றங்கரையோரம் புதைந்துள்ள தொன்மங்கள் குறித்து தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டும் என்று தொன்மம் வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது குறித்து பேசிய ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வெற்றித்தமிழன், தொல்லியல் ஆய்வுகள் வட மாவட்டங்களில் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், பாலாற்றங்கரை நாகரிகம் தொடர்பான ஆய்வுகள் நடத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகூட எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். இதனால் நினைவுச் சின்னங்கள் அழியும் ஆபத்துள்ளது என்றும், அகழ்வு பணியை தொல்லியல் துறை விரைவில் தொடங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.