இன்று முதல் அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்களை மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், நுழைவுச் சீட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்களை மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அருங்காட்சியகத்துக்கு வரும் பார்வையாளர்கள் நுழைவுச் சீட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களால் வெளியிடப்பட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.