மழைக்கால கூட்டத்தொடரை ஜூலை 19 ம் தேதி முதல் தொடங்க நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரைத்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது தணிந்திருப்பதை அடுத்து, மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஆலோசனை நடத்தியது.
கூட்டத்தில், ஜூலை மாதம் 19ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடரை நடத்த பரிந்துரைக்கப்பட்டது.
இந்த கூட்டத்தொடரின் போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஆகியவை குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரை நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.