கேரளாவில் வரும் 8 ஆம் தேதி பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

கேரளாவில் 8 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது. ஆனால் பருவமழை தொடங்குவதில் இந்த ஆண்டு மேலும் தாமதம் ஏற்பட்டு வரும் 8 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தற்போது தென்மேற்கு பருவமழை மாலத்தீவுகள், குமரிக்கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் மிதமாக காணப்படுவதாக அவர்கள் கூறினர். தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியிலும் அடுத்த 24 மணி நேரத்தில் பருவமழைக்கான அறிகுறிகள் அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version