மாணவர்களை போல் தினமும் பள்ளிக்கு வருகை தரும் குரங்கு

ஆந்திர மாநிலம் கர்னூரிலுள்ள வெங்கலம்பள்ளி கிராமத்தில், அரசுப் பள்ளிக்கு குரங்கு ஒன்று கடந்த சில நாட்களாக தினசரி வந்து செல்கிறது. முதலில் குரங்கை பார்த்து பயந்து போன மாணவர்கள் அதை விரட்ட முயன்றனர். ஆனால் குரங்கு எங்கும் போகாமல் அங்கேயே சுற்றிவந்தது. இதையடுத்து பயத்தை மறந்த மாணவர்கள், அந்த குரங்கிற்கு லட்சுமி என பெயரிட்டு அதனுடன் விளையாடி மகிழ்கின்றனர். அந்த குரங்கு காலையில் பள்ளியில் பிரார்த்தனை கூட்டம் ஆரம்பிக்கும் போது வந்துவிடுகிறது. பின்னர் பள்ளி முடிந்ததும் காற்றிக்குள் சென்று விடுகிறது. குரங்கின் இந்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குரங்கு லட்சுமி இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Exit mobile version