தமிழகத்தில் மருத்துவக் குழுக்களின் தொடர்ந்து கண்காணிப்பால் பன்றிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை 35 சதவீதம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
மாநிலம் முழுவதும் 1700 பேர் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறினார். அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகக் கூறினார்.கடந்த ஆண்டு 3800 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். காய்ச்சல் குறித்து மருத்துவ குழு கண்காணித்து வருவதாகவும், கடந்த 5 நாட்களில் சுமார் 35 சதவீதம் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post