நிபா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பரவுவதை தடுக்கும் வகையில், கேரள- தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

நீலகிரி பகுதியில் உள்ள 7 சோதனை சாவடிகளிலும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் மருத்துவ குழு, சுகாதார குழு ஈடுபட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களிடம், நிபா வைரஸ் குறித்து சோதனை நடத்தப்படுகிறது. தமிழக எல்லையான தாளூர்  போன்ற சோதனை சாவடியில் பேருந்தில் வருகின்றவர்களை சோதனை நடத்தி அனுமதிக்கிறார்கள். நிபா வைரஸ் காரணமாக, எல்லை வழியாக பேருந்தில் பயணிப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

இதற்கிடையே நெல்லை மாவட்டம் புளியரை காவல்துறை சோதனை சாவடி அருகே தமிழக சுகாதாரத்துறை சார்பில் நெல்லை மாவட்ட சுகாதாரத் துறையின் ஏற்பாட்டின் கீழ் மருத்துவர் சதீஷ் தலைமையில் நடமாடும் மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி அந்த வாகனங்களில் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் சம்பந்தமாக யாரும் வருகிறார்களா? என்று கண்டறியப்பட்டு வருகிறது.

Exit mobile version