மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதில் இருந்து 15 நாள்களில், 540 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், நகை மற்றும் இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அறிவிப்பை கடந்த மார்ச்10ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதையடுத்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் நாடு முழுவதும் தேர்தல்பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம், நகைகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து 15 நாட்களில் 540 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், நகைகள், மற்றும் இலவச பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் 107.24 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.