தெலங்கானாவில் பறக்கும்படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் உத்தம் குமாருக்கு சொந்தமான வாகனத்தில் இருந்து 48 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
தெலங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள அப்துல்லா நகர் சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரினில் சோதனை செய்தபோது 48 லட்சம் ரூபாய் எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. மேலும், காரில் பயணித்த சீனிவாச ரெட்டியிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமாருக்கு சொந்தமான வாகனம் என்பதும் தெரியவந்தது பிடிபட்ட பணத்தை வருமானவரித் துறை அதிகாரியிடம் ஒப்படைத்த பறக்கும்படை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.