நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் பங்கேற்று வரும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர்.
நேப்பியர் ஒருநாள் போட்டியில், இந்திய வீரர் முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது முதலாவது ஓவரின் போது நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்திலை ஆட்டமிழக்க வைத்த அவர், ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் என்ற சிறப்பை பெற்றார். தனது 56 வது போட்டியில் விளையாடிய அவர் ஜாகீர்கானின் சாதனையை முறியடித்து, இச்சிறப்பை பெற்றுள்ளார்.