இலங்கையில் பள்ளிவாசல்களை தாக்க முகமது காசிம் தீவிரவாத குழு திட்டம்

இலங்கையில் முஸ்லிம் பள்ளிவாசல்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்த மற்றொரு தீவிரவாத குழு திட்டமிட்டுள்ளதாக காவல்துறை ஆணையருக்கு குண்டுவெடிப்பு தொடர்பான சி.ஐ.டி தலைவர் ரவி செனவிரத்ன அறிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பை சிஐடி தலைவர் ரவி செனவிரத்ன தலைமையிலான குழுவினர் விசாரணை செய்துவருகின்றனர். இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக காவல்துறை ஆணையருக்கு அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் தங்களது கொள்கைக்கு மாறான பள்ளிவாசல்களை தாக்க முகமது காசிம் சஹ்ரான் தலைமையிலான தீவிரவாத குழு திட்டமிட்டுள்ளதாக சிஐடி தலைவர் ரவி செனவிரத்ன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று புனித ஜூம்மா தினத்தையொட்டி பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் ஒன்றுகூடும் நேரத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள செனவிரத்ன, இதையொட்டி அனைத்து பள்ளிவாசல்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.

ஹுப்பு மற்றும் அவிலியா பள்ளிவாசல்கள் அவர்களது இலக்காக இருக்கலாம் என தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இங்கெல்லாம் பாதுகாப்பை பலப்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி அனைத்து பள்ளிவாசல்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version