ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த விவசாயி புதிய முறையில் தக்காளியில் மோடியின் பெயரை அச்சிட்டு அசத்தி வருகிறார்.அவர் தக்காளியின் ஒரு புறம் மோடியின் பெயரையும்,மறு புறம் இந்திய வரைப்படத்தையும் அச்சிட்டு பயிரிட்டு வருகிறார்.ஒரு தனியார் நிறுவனம் வித்தியாசமான முறையில் தக்காளி பயிரிட்டால் 25% கூடுதல் லாபம் தருவதாக அறிவித்துள்ளது.
இதனை அறிந்த சிவக்குமார் என்பவர் அந்நிறுவனத்தை அனுகியுள்ளார். ஒரு பக்கம் பிரதமர் மோடி பெயரும்,மறு பக்கம் இந்திய வரைபடமும் பொறித்த இதய வடிவிலான பிளாஸ்டிக் அச்சு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.அதனை பயன்படுத்தி அவர் பயிரிட்ட தக்காளி தற்போது அனைவராலும் பேசப்படுகிறது.