என்ன ’2’ கிலோ தக்காளி இலவசமா? ஸ்மார்ட் போன் வாங்கினால் தக்காளி இலவசம்..!!

 கேளிக்கையாகும் தக்காளிகள்!

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் தக்காளி விலை என்பது பேசுபொருளாகிவிட்ட ஒன்றாக உள்ளது.  தமிழ் சினிமாவில்  நம் வடிவேலு கூறுவது போல என்ன ஒரு கிலோ தக்காளி ஐநூறு ரூபாயா..! ஒரு கிலோ காரட்டு ஆயறுபாயா..!! என்பது  போல தமிழ்நாட்டில் ஒருகிலோ தக்காளியின் விலை நூறு ருபாய்கு விற்பனை ஆனது. ஆனால் தற்போது உள்ள நிலையில்  ஒரு பெட்டி தக்காளியின் விலை 1400 முதல் 1500 வரை விலை நிர்ணயம் செய்யப்படு விற்கப்படுகிறது.  ஏனெனில், தக்காளி வரத்து குறைந்து உள்ளதால் இன்றைக்கு 28 வண்டிகளில் 380 டன் மட்டுமே கோயம்பேடு மார்க்கெட்க்கு இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது என வியாபாரிகள் கூறுகின்றனர்.  தக்காளி விலை உயர்வால்; ஆங்காங்கே சில அரசியல்வாதிகள், மற்றும் நடிகர்மன்ற தலைவர்கள் எனப பல இடங்களில் தக்காளியை இலவசமாக வழங்கிவருகின்றனர். இன்னிலையில், மத்தியப் பிரதேசத்தில் மொபைல் கடை வியாபாரி ஒருவர் ஒரு ’’ஸ்மார்ட் போன் வாங்கினால் இரண்டு கிலோ தக்காளி’’!! இலவசம் என்று அறிவித்து உள்ள சம்பவம் சமூக வளைத்தலங்களில் பரவலாகி வருகிறது.

   இரண்டு கிலோ தக்காளி இலவசம்..!

புதுடெல்லி: ‘ஸ்மார்ட் போன்’ வாங்கும் வாடிக்கையாளருக்கு, இரண்டு கிலோ தக்காளி இலவசமாக வழங்குவது, பாதுகாவலரை நியமித்து தக்காளி விற்பனை செய்வது போன்ற நுாதன சம்பவங்கள் பல மாநிலங்களில் அரங்கேறி வருகின்றன.  இது போன்றே மத்தியப் பிரதேசத்தில் அசோக் நகர் என்னும் இடத்தில் மொபைல் கடை உரிமையாளர் ஒருவர் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கினால் இரண்டு கிலோ தக்காளி இலவசமாக  வழங்கப்படும்  என்று கூறி  வழங்கிவருகிறார்.  இதனை அறிந்த மக்கள்  ஆர்வமுடன் அவரது கடைக்கு சென்று பார்வையிடுகின்றனர். இந்த தகவலின் பேரில் அவரது கடையில் அதிக அளவில் செல்போன் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த கடை வீதிகளில் அதிக கூட்ட நெரிசல்களுடன் காணப்படுகின்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க சில கடைகளில் ‘பவுன்சர்’ களவைத்து எல்லாம் தக்காளி விற்பனை செய்யும் சம்பவமும் நடந்துக்கொண்டு வருகிறது.

’பவுன்சருடன் தக்காளி விற்பனை’:

தக்காளியின் வரத்து குறைவாக உள்ளதாலும், அதன் விலை கடும் உயர்வாலும் காய்கறி கடை வியாபாரிகளின் நிலை மிகவும் மோசமக உள்ளது. நாடு முழுதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கிலோ 100 ரூபாயில் துவங்கி, 160 ரூபாய் வரை மாநிலத்துக்கு மாநிலம்  விலை என்பது மாறிக்கொண்டு வருகிறது. இன்னிலை இருக்க காய்கறி வியாபாரிகளும் பல நூதன முறையில்  தக்காளியை விற்பனை செய்து வருகின்றனர். ‘பவுன்சர்’ களவைத்து எல்லாம் தக்காளி விற்பனை செய்யும் சம்பவமும் நடந்து உள்ளது.  உத்திரப் பிரதேசம்  வாரணாசியில் உள்ள காய்கறி சந்தையில் காய்கறி கடை வைத்து உள்ளார், அஜய் பவுஜி என்ற வியாபாரி.

இவர் தனது கடையில் அதிக அளவு தக்காளி வைத்து விற்பனை செய்து வந்து உள்ளார்.  தக்காளியின் விலை உச்சத்தில் இருபதால் இவரது கடையில் திருட்டு சம்பவம் நடக்கிறதாக கூறுகிறார். இதனால் இவர்  ‘பவுன்சர்’ என்னும் தனியார் நிறுவன பாதுகாவலரை பணியமற்தி, தக்காளி விற்பனை செய்து வருகிறார். ஏனென்றால் இவரது கடைகளில் தக்காளியை திருடி விட்டு திருடவில்லை என்றும், சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பல வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் அதனால்  கடைக்கு பாதுகாவலர் வேண்டும் என்றும் ஒரு ‘பவுன்சரை’ நியமித்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். இதற்கெல்லாம் தக்காளி விலை குறைந்தால் மட்டுமே தீர்வு காண முடியும் என மக்கள் கூறுகின்றனர்.

 

Exit mobile version