கொடுக்கின்ற தக்காளியிலும் Scam செய்யும் திமுக! நியாய விலைக் கடையில் அநியாயம்!

மக்களின் அத்தியாவசிய சமையல் பொருட்களில் முதன்மையான பொருள் தக்காளி ஆகும். தக்காளி இல்லாமல் நம்மவர்களுக்கு எந்த சமையலையும் செய்ய வராது. தக்காளியின் கொள்முதலும் வரத்தும் சரிவர இல்லாததால் அதிக தக்காளியை அதிக விலைக்கு விற்க வேண்டிய நிர்பந்தம் வியாபரிகளுக்கு ஏற்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக உணவுப் பாதுகாப்புத் துறையானது நியாய விலைக் கடைகளில் தக்காளியானது விற்கப்படும் என்று கூறியது. தக்காளி சாதம், தக்காளி குழம்பு வைப்பவர்கள் எல்லாரும் இன்றைக்கு பணக்காரர்கள் என்ற கேலியான மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் பரவி கவனம் பெற்றது.

சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 120 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரை விற்கப்படுவந்த நிலையில் நியாயவிலைக் கடையில் ஒரு கிலோ 60 ரூபாய் என்கிற மதிப்பில் கொடுக்கப்பட உள்ளதாக அறிவித்த நிலையில் தக்காளி விநியோகம் இன்று செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நியாயவிலைக் கடைகளில் தொடங்கிய விற்பனையில் 20 நிமிடத்தில் தக்காளிகள் விற்று தீர்ந்தன.  ஒவ்வொரு நியாய விலை கடைகளுக்கு ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பட்டைத்தாரர்கள் உள்ள நிலை வெறும்  3 பெட்டிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்ததாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

Exit mobile version