தேசத்தை முன்னேற்றுவது தான் தனது இலக்கு -பிரதமர் மோடி

பலமுறை தேர்தலில் போட்டியிட்டிருக்கும் தான் ஒருபோதும் தனது சாதியினரின் ஆதரவை கோரியதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பல்லியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், தன்னை பற்றி விமர்சிக்காமல் எதிர்க்கட்சியினருக்கு நாள் கழியாது என்றும் இதற்கெல்லாம் இந்திய மக்கள் பதில் கொடுப்பார்கள் என்றார். இதனிடையே பலமுறை தேர்தலில் போட்டியிட்டிருக்கும் தான் ஒருபோதும் தனது சாதியினரின் ஆதரவை கோரியதில்லை என கூறிய பிரதமர் நரேந்திர மோடி, தேசத்தை முன்னேற்றுவது தான் தனது இலக்கு என கூறினார். முந்தைய காங்கிரஸ் அரசு 2ஜி ஊழலில் மும்முரமாக இருந்ததாகவும், ஆனால் 4 ஜி சேவையை ஏழை மக்களிடம் பாஜக அரசு கொண்டு சேர்த்ததாக தெரிவித்தார்.

Exit mobile version