கடந்த நான்கரை ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி 84 வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றதாகவும், அதற்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகியுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்வதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், பிரதமர் மோடி கடந்த நான்கரை ஆண்டுகளில் எத்தனை நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார் என்றும் அதற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்றும், மக்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. பினோய் விஸ்வம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், கடந்த நான்கரை ஆண்டுகளில், 84 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டதாக தெரிவித்தார். அதற்காக, அரசுக்கு 2 ஆயிரத்து 12 கோடி ரூபாய் செலவானதாகவும் அவர் கூறினார்.
கடந்த நான்கரை ஆண்டுகளில் மோடி பயணம் செய்த ஏர் இந்தியா விமானத்தின் பராமரிப்புக்கு மட்டுமே, ஆயிரத்து 583 கோடி ரூபாய் செலவானதாகவும் அவர் குறிப்பிட்டார்.