நேர்மையான காவலாளியா? ஊழல் எஜமானர்களா? -யார் வேண்டும்

நேர்மையான காவலாளியா அல்லது ஊழல் எஜமானர்களா உங்களுக்கு யார் வேண்டும் என்று வாக்காளர்களிடம் பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிராவின் அகமது நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டஅவர், கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுகளாக இந்தியாவில் திடமான முடிவு எடுக்கும் அரசை உலகம் பார்த்து கொண்டு இருப்பதாக தெரிவித்தார். 10 ஆண்டுகளாக நடந்த ரிமோட் கண்ட்ரோல் ஆட்சியின் போது நாளுக்கொரு ஊழல் புகார்கள் வந்த வண்ணம் இருந்ததாக தெரிவித்த அவர், நேர்மையான காவலாளியா அல்லது ஊழல் எஜமானர்களா யார் வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

உலகமே இந்தியாவை சூப்பர் பவராக பார்க்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் வங்கிக் கடன் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மே மாதம் 23ம் தேதிக்கு பிறகும் மீண்டும் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின்பு, பிரதமரின் கிசான் விகாஸ் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளும் பலனடைவார்கள் என்று உறுதியளித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஒழிக்கப்பட்டால் மட்டுமே இந்தியா வளம் பெறும் என்று நாட்டு மக்கள் கூறுவதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version