மக்களவைக்கு உடனடியாக தேர்தல் நடைபெற்றால் பா.ஜ.க 281 தொகுதிகளில் வெற்றி பெற்று மோடி மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க கூட்டணி அரசு தனது பதவிக்காலத்தை நிறைவு செய்ய உள்ளது.
நான்கரை ஆண்டுகளில் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., ரபேல் ஊழல், விவசாயிகள் பிரச்னை போன்றவற்றால் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்தியா டி.வி. மற்றும் சி.என்.எக்ஸ் இணைந்து உடனடியாக மக்களை தேர்தலை நடத்தினால் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என மாநில வாரியாக கருத்துக் கணிப்பை நடத்தின.
அதன்படி தற்போதைய பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 281 தொகுதிகளில் வெற்றி பெறும் எனத் தெரிய வந்துள்ளது. அதன்படி, மோடி மீண்டும் பிரதமராவார் எனவும், காங்.தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 124 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 138 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.