ஐநாவின் 74-வது பொதுசபை கூட்டத்தில் இன்று இரவு 8 மணியளவில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐநாவின் 74-வது பொதுச்சபை கூட்டத்தில் இன்று இரவு 8 மணியளவில் உலக தலைவர்களின் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். பிரதமரின் உரையில் காஷ்மீர் விவகாரம் குறித்து எந்த தகவலும் இருக்காது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடி ஐ.நா பொதுசபை கூட்டத்தில் பங்கேற்று பேசுவது இது 2-வது முறையாகும். ஐ.நா பொதுச்சபை நிகழ்ச்சியை முடித்து விட்டு பிரதமர் மோடி தாயகம் திரும்ப உள்ளார்.
இந்த ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் பங்கேற்க உள்ளார். இதில் அவர் காஷ்மீர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.