பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வரும் யோகா தினம்

சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, ராஞ்சியில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உணர்த்திடும் வகையில், சர்வதேச யோகா தினத்தை, அறிவிக்க பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா பொதுச்சபையில் 2014ஆண்டு, ஜூன் 21 ஆம் தேதியன்று பரிந்துரைத்திருந்தார். அமெரிக்கா, கனடா, சீனா உட்பட பல உலக நாடுகள் இதனை ஆதரித்தன. இந்நிலையில், 2014ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி, 193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, ஜூன்21 ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. அதன்பிறகு முதல்முறையாக 2015 ஆம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் 191 நாடுகளின் பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி யோகா பயிற்சி மேற்கொண்டார். ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வரும் யோகா தினம், இன்று நாடு முழுவதும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி உள்பட 30 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர். அதேபோல், தலைநகர் டெல்லியில், நடைபெற்று வரும் நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

Exit mobile version