கடந்த 5 ஆண்டு மோடியின் ஆட்சிக் காலத்தில் 50 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்தியமைச்சர் அமித் ஷா, 50 முக்கிய முடிவுகளை எடுத்துள்ள பிரதமர் மோடி, நாட்டின் தலைவிதியை மாற்றியுள்ளதாக கூறினார். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்று கூறிய அமித் ஷா, மோடியின் துணிச்சலான முடிவால், பிற மாநிலங்களை போல் காஷ்மீர் மக்களும் மத்திய அரசின் சலுகைகளை பெறுவார்கள் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அமித் ஷா, ஆகஸ்ட் 5ந் தேதி முதல் இந்நாள் வரை காஷ்மீரில் துப்பாக்கி சத்தம் கேட்டதேதில்லை என்று கூறினார். இந்தியாவில், தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விட முயன்ற பாகிஸ்தானுக்கு, மோடியின் அரசு தக்க பதிலடி கொடுத்துள்ளதாகவும், உலகமே இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் மோடியின் ஆட்சிக் காலம் இருக்கிறது என்றும் அமித் ஷா தெரிவித்தார்.