பிரதமர் நரேந்திர மோடி, தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கும், காஜிபூருக்கும் இன்று பயணம் மேற்கொள்கிறார். வாரணாசியின் தேசிய விதைகள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய வளாகத்தில் உள்ள பன்னாட்டு அரிசி ஆராய்ச்சி நிறுவனம், தெற்காசிய பிராந்திய மையம் ஆகியவற்றை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.
சுமார் 180 கோடி ரூபாய் மதிப்பிலான 15 வளர்ச்சி திட்டங்களை அவர் அறிவிக்கவுள்ளார். 98.4 கோடி ரூபாய் மதிப்பிலான 14 புதிய வளர்ச்சி திட்டங்களையும் மோடி தொடங்கி வைக்கவுள்ளார். கடந்த 2 மாதங்களில், பிரதமர் மோடி வாரணாசிக்கு மேற்கொள்ளும் 2ஆவது பயணம் இதுவாகும்.
இதைத் தொடர்ந்து காஜிபூரில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் அவர், 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகாராஜா சுஹேல்தேவின் நினைவு தபால் தலையை வெளியிடுகிறார்.