இந்தியா – பாகிஸ்தான் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மோடி மரியாதை!

இந்தியா-பாகிஸ்தான் போரின் வெற்றியின் பொன்விழா ஆண்டையொட்டி, உயிர்நீத்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

1971ஆம் ஆண்டில் இந்தியா- பாகிஸ்தான் இடையே நடந்த போரில், பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்தி, இந்திய ராணுவம் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றது. இந்த போர் வங்கதேசம் என்ற தனிதேசம் உருவாக வழிவகுத்தது. இந்தியா- பாகிஸ்தான் போரின் பொன்விழா, நாடு முழுவதும் இன்று விஜய் திவாஸ் எனும் பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியையொட்டி டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவுச் சின்னத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். தொடர்ந்து, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, அணையாத ஜோதியையும் ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், உயர்நீத்த வீரர்களுக்கு முப்படை தளபதிகளும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து போர் நினைவு சின்னத்தில் உள்ள வருகைப் பதிவேட்டில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டார். இங்கு ஏற்றப்படும் 4 வெற்றி ஜோதிகள், 1971 போரில் பரம் வீர் சக்ரா, மகாவீர் சக்ரா விருதுகள் பெற்ற வீரர்களின் கிராமங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. பொன்விழா வெற்றி ஆண்டை முன்னிட்டு, ராணுவ இன்னிசை நிகழ்ச்சி, கருத்தரங்குகள், கண்காட்சிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் கொரோனா பரவல் காரணமாக இரவுநேர நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சோஹோ ((Soho)) மாவட்டத்தில் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றாமல், இரவு நேரங்களில் மக்கள் வீதிகளில், நடனமாடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, லண்டனில் மூன்று விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

Exit mobile version