காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலியில் பிரதமர் மோடி நாளை நலத்திட்டங்களை துவக்கி வைக்கவுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் தொகுதியாக உத்தர பிரதேசத்தின் ரேபரேலி உள்ளது. இந்தத் தொகுதிக்குட்பட்ட ரேபரேலி – பதேபூர், பாண்டா இடையில் தேசிய நெடுஞ்சாலை திட்டம் 558 கோடி ரூபாய் செலவில் போடப்பட்டுள்ளது.
நான்கு புறவழிச்சாலைகளுடன் இந்த நெடுஞ்சாலை இணைக்கப்படுவதால் பயண தூரம் 7 புள்ளி 8 மணிநேரத்தில் இருந்து இரண்டரை மணி நேரமாக குறையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சாலைகளை நாட்டிற்கு அர்பணிக்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தேசிய நெடுஞ்சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கிறார்.