டெல்லி-வாரணாசி விரைவு ரயிலை மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்

மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வந்தே பாரத் விரைவு ரயிலை டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். டெல்லியில் இருந்து வாரணாசிக்கு 9 மணிநேரம் மற்றும் 45 நிமிடங்களுக்கு செல்லும் வந்தே பாரத் விரைவு ரயில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கான்பூர், அலகாபாத் உள்ளிட்ட ரயில்நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும். வந்தே பாரத் என பெயரிடப்பட்டுள்ள இந்த விரைவு ரயிலை, டெல்லி ரயில்நிலையத்தில் இருந்து துவக்கி வைத்த பிரதமர் மோடி, தொடர்ந்து டெல்லி ரயில் நிலையத்தின் வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்த துவக்கவிழா நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலும் கலந்து கொண்டார்.

சதாப்தி ரயில்களை விட அதிக வசதிகளை கொண்டதாக இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு மிகச்சிறந்த பயண அனுபவத்தை இந்த ரயில் அளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரேநேரத்தில் ஆயிரத்தி 128 பயணிகள் பயணம் செய்யும்வகையில் வடிமைக்கப்பட்டுள்ள இந்த ரயிலில் தானியங்கி கதவுகள், இணையதள வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ரயிலை 18 மாதங்களில் சென்னை ஐ.சி.எப் வடிவமைத்துள்ளது.

Exit mobile version