மீண்டும் ஆட்சி அமைத்ததும் அனைத்து விவசாயிகளுக்கும் நிதியுதவி-மோடி

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் சிறுகுறு விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நந்துர்பர் நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், சட்டமேதை அம்பேத்கர் கொண்டு வந்த இட ஒதுக்கீட்டை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றார். இதனிடையே மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்திற்கான 5 ஏக்கர் வரையரை நீக்கப்படும் என கூறிய பிரதமர் மோடி, நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் அவர்களின் விளை நிலங்கள் பாதுகாக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 15 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைத்திருக்கும் காங்கிரஸ், ஏழைகளுக்காக மத்திய அரசு வழங்கி வரும் பணத்தை கொள்ளை அடித்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

Exit mobile version