ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக அறிவித்ததன் மூலம் பொதுமக்களிடம் இருந்த பணத்தை எடுத்து தன்னுடைய கார்பரேட் நண்பர்களுக்கு மோடி கொடுத்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய சரத்யாதவ், மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மகாபந்தன் மூலம் பீகாரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவது தடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, பணக்காரர்களின் நலனுக்காவே மோடி செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.