தேசிய விலங்கு நோய் கட்டுப்பாடு திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி

கால்நடை நோய் தடுப்பு திட்டமான, தேசிய விலங்கு நோய் கட்டுப்பாடு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தேசிய விலங்கு நோய் கட்டுப்பாடு திட்டத்தின் மூலம், கால்நைடையின் கால் மற்றும் வாய் நோய்,ஒழிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்காக 12 ஆயிரத்து 652 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் 5 கோடி கால்நடைகளுக்கு நோய் தடுப்பு ஊசி போடப்படுகிறது. இந்த திட்டத்தை உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இதன்மூலம் கால்நடைகளை வைத்திருக்கும் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றார். 2025ஆம் ஆண்டிற்குள் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் தொற்றுகள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், உத்தர பிரதேச மாநில அரசின் 16 புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

Exit mobile version