பீகார் தலைநகர் பாட்னாவில், மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். விழாவில், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் பங்கேற்றார். பரானி என்ற இடத்தில் நடந்த விழாவில், 13 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். விழாவில் பேசிய மோடி, தீவிரவாத தாக்குதலினால், மக்கள் மனதில் எந்த அளவிற்கு கொதிப்பு உள்ளதோ, அதே அளவிற்கு தன்னுடைய மனதும் கொதிப்பதாக தெரிவித்தார்.
தாக்குதலில் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த பாட்னாவைச் சேர்ந்த வீரர் சஞ்சய் குமார் சின்ஹா மற்றும் பகல்பூரைச் சேர்ந்த வீரர் ரதன் குமார் தாக்கூருக்கும் தனது அஞ்சலியை செலுத்துவதாக கூறினார்.
ராஞ்சி-பாட்னா இடையேயான வாரந்திர ரயில் திட்டம் உள்ளிட்ட 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு திட்டங்களையும் அம்மாநிலத்தில் தொடங்கி வைக்கிறார்.