டிவிட்டரில் "சவ்கிதார்" சொல்லை நீக்கிய பிரதமர் மோடி

தனது டிவிட்டர் பக்கத்தில் உள்ள இருந்த சவ்கிதார் என்ற சொல்லை பிரதமர் மோடி நீக்கியுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாஜக தனிப்பெரும்பானமையும் 350 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை காவலாளியே திருடன் என விமர்சித்தார். இதற்கு பிரதமர் மோடி தனது டுவீட்டர் கணக்கில் காவலாளி என பொருள்படும் சவ்கிதார் எனும் சொல்லை சேர்த்துக் கொண்டார். அவரை பின்பற்றிய மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் டுவீட்டார், பேஸ்புக் கணக்குகளில் தங்கள் பெயருடன் சவ்கிதாரை இணைத்துக் கொண்டனர். இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் இருந்து சவ்கிதார் என்ற சொல்லை நீக்கிய பிரதமர் மோடி, ஜாதி, மதம், ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி ஆகிய தீமைகளில் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற ஒரு வலிமையான அடையாளமாக சவ்கிதார் மாறிவிட்டதாகவும், இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நேரம் வந்து விட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

Exit mobile version