விவசாயிகளை கண்டு கொள்ளாத பிரதமர் மோடி, 15 தொழிலதிபர்களின் 3 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர், கன்ஜ் பசோடா பகுதியில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்ற தவறி விட்டதாக ராகுல் கண்டனம் தெரிவித்தார்.
ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும், குடும்பம் ஒன்றிற்கு 15 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் போன்ற வாக்குறுதிகள் என்னவானது என்று அவர் கேள்வி எழுப்பினார். 15 தொழிலதிபர்களின் 3 லட்சம் கோடி கடனை அரசு தள்ளுபடி செய்துள்ளதை சுட்டிக் காட்டிய ராகுல்காந்தி, விவசாயிகளுக்கு இதுபோன்று எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.