முத்தலாக் சட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாக அக்கட்சியின் மாதர் சங்க பொதுச் செயலாளர் பிருந்தா காரத் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முத்தலாக் மசோதவை மக்களவையில் நிறைவேற்றியதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவிப்பதாகவும், இத்தகைய சிவில் பிரச்சினை தொடர்பாக பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் முடிவு செய்வது சரியல்ல எனவும் கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மோடி மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோரின் அரசுகள் மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார். பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களால் இந்தியாவுக்கு எந்த பயன்களும் இல்லை என்றும் பிருந்தா காரத் விமர்சித்தார்.