26ம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார் மோடி

மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, பிரதமராக நரேந்திர மோடி 26ம் தேதி மீண்டும் பதவியேற்கிறார்.

7 கட்டமாக மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி 350 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து மீண்டும் பாஜக தலைமையில் ஆட்சி அமைவது உறுதியானது. நாளை மறுநாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பிரதமர் மோடி ஆட்சி அமைக்க அழைக்குமாறு கடிதம் அளிப்பார். இதைத்தொடர்ந்து, டெல்லியில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் மோடி 2-வது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, மொத்த வாக்குகளில் 64 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதாவது 6 லட்சத்து 74ஆயிரத்து 664 வாக்குகள் பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி, காங்கிரஸ் வேட்பாளர்களை விட 3 லட்சத்து 71 ஆயிரத்து 784 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி 3-ஆம் இடத்தையே பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version