கொல்லம் ஆழப்புழை இடையிலான புறவழிச்சாலையை திறந்து வைத்த பிரதமர்

கேரளாவில் 352 கோடி ரூபாய் மதிப்புள்ள கொல்லம் புறவழிச் சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கேரள வந்திருந்த பிரதமர் கொல்லம், ஆழப்புழா இடையிலான 13 கி.மீ நீளமுள்ள புறவழிச்சாலையை துவங்கி வைத்தார். இச்சாலையினால் கொல்லம் ஆழப்புழா இடையிலான பயண நேரம் குறைவது மட்டுமின்றி கொல்லம் நகரின் போக்குவரத்து நெரிசலும் குறையும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து பேசிய அவர் பாரத் மாலா திட்டத்தின் கீழ் மும்பை கன்னியாகுமரி இடையிலான தாழ்வாரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது என்றும் பிரகதி திட்டத்தின் மூலம் மத்திய அரசின் பல்வேறு திட்டப் பணிகள் தாமதமின்றி செயல்படுத்தப்படுவதாகவும் கூறினார்.

 

Exit mobile version