காங்கிரஸ் கட்சிக்கு ஏழை, எளிய மக்களின் வளர்ச்சி பற்றி எப்போதும் அக்கறையில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அல்வார் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
நடுத்தர மற்றும் விளிம்பு நிலை மக்களின் வளர்ச்சி குறித்து, காங்கிரசுக்கு எப்போதும் தொலைநோக்கு திட்டம் இருந்ததில்லை என அவர் குறிப்பிட்டார். அம்பேத்கரை புறக்கணித்த காங்கிரஸ், தேர்தல் அரசியலுக்காக மட்டுமே அவர் பெயரை பயன்படுத்தி வருவதாகவும் மோடி விமர்சித்தார்.
பாஜக அரசின் திட்டங்களால் மக்கள் மேம்பட்டிருப்பதாக தெரிவித்த மோடி, மீண்டும் பாஜகவுக்கு வாய்ப்பளிப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். காங்கிரஸ் மக்களை பிரித்தாண்டதாகவும், பாஜக மக்களை ஒருங்கிணைத்ததாகவும் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.