கஜா புயல் சேத விவரங்களை விளக்கி, நிதி கோருவதற்காக பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்கிறார்

கஜா புயல் சேத விவரங்களை விளக்கி, நிதி கோருவதற்காக பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்கிறார்.

கஜா புயலால் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. இந்த பாதிப்பு குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு கேட்டறிந்தனர்.

இந்தநிலையில், கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கி கூறி உரிய நிதியை பெறுவதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். இன்று காலை பிரதமரை சந்திக்கும் முதலமைச்சர், கஜா புயல் சேத விவரங்களை விளக்கி, உரிய நிவாரண நிதி வழங்குமாறு வலியுறுத்த உள்ளார்.

புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழுவை அமைக்கப்பட்டு, பாதிப்பை ஆய்வு செய்ய உள்ளதாக தெரிகிறது. அந்த குழுவின் அறிக்கையின்படி, மத்திய அரசு நிவாரண நிதி வழங்கும் என கூறப்படுகிறது.

Exit mobile version