சீனாவுடன் மோதல்போக்கு அதிகரித்து வரும் வேளையில், ரபேல் விமானம், அப்பாச்சி ஹெலிகாப்டர் வரவினால் இந்திய விமானப்படையின் பலம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது, வான்பரப்பில் கண்காணிப்பு திறனை அதிகரிக்கும் விதமாக அதிநவீன கண்காணிப்பு விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது இந்தியா..
அதிநவீன ரேடார் கருவிகளின் மூலம் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களின் நகர்வை சில நொடிகளில் கண்டுபிடித்து அவற்றின் இயக்கத்தை நிறுத்த முடியும். இத்தகைய ரேடார் அமைப்பைக் கொண்டுள்ள அதிநவீன விமானங்கள் airbourne early warning and control system எனப்படுகின்றன.
எதிரிப்படைகளின் விமானங்களை முன்கூட்டியே கணித்து எச்சரிக்கும் இத்தகைய விமானங்களை பாகிஸ்தானும் சீனாவும் அதிக அளவில் வைத்துள்ளன. பாகிஸ்தான் ராணுவம், சீனாவின் தயாரிப்பான ZDK 03, SWEEDISH SAAD 2000 ரகங்களைச் சார்ந்த 10 வான் கண்காணிப்பு விமானங்களை வைத்துள்ளது. சீனாவும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட காங் ஜிங், மைன்ரிங், கேஜே 500 ரகங்களை சார்ந்த 30 கண்காணிப்பு விமானங்களை வைத்துள்ளன.
இந்தியா தன்பங்குக்கு இஸ்ரேலின் தயாரிப்பான பால்கான் ரக கண்காணிப்பு அமைப்புகளை வாங்க உள்ளது. ஏற்கனவே இந்தியாவிடம் 3 பால்கான் ரக விமானங்கள் உள்ளன. இவற்றில் உள்ள அதிநவீன தொழில்நுட்பம் சில நொடிகளில், வான்பரப்பில் நுழையும் எதிரி நாட்டு விமானங்களை கண்டறிந்து எச்சரிக்கையை அனுப்பும். அதாவது7 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் வரும் எதிரிகளின் விமானங்களையும் துல்லியமாக அடையாளம் காணும் திறன் கொண்டது பால்கன். கூடவே மணிக்கு 973 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.
தற்போது உலக நாடுகளால் பயன்படுத்தப்படும் கண்காணிப்பு விமானங்களில் பால்கான் ரக விமானங்கள் தான் மிகவும் திறன் வாய்ந்ததாகும். சீனாவுடன் எல்லைப் பிரச்சனை அதிகரித்து வரும் வேளையில் அதிநவீன ஆயுதங்களை இந்திய ராணுவம் வாங்க வேண்டியது அவசியமாகிறது. அந்த பட்டியலின் புதிய வரவு தான் இஸ்ரேலின் பால்கன்.