மனிதர்கள் மீது சோதிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி சாதகமான முடிவை தந்துள்ளதாக அமெரிக்க மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைத் தடுக்க உலக நாடுகள் போராடி வருகின்றன. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதிலும் பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதில் குறிப்பாக அமெரிக்கா – சீனா இடையே தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் முதல் முறையாக மாடர்னா இன்க் இன் கோவிட் -19 தடுப்பூசி, மனிதர்களின் உடல்களில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்கான அறிவிப்பை மாடர்னா மருந்து தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. மார்ச் மதத்தில் இருந்து 8 மனிதர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், சாதகமான முடிவு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மாடர்னா இன்க் இன் கோவிட் -19 தடுப்பூசி பாதுகாப்பானது என்று ஆய்வு முடிவுகள் கூறுவதாகவும், அடுத்தகட்ட சோதனைகளுக்கு பிறகே பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.