திருநெல்வேலியில் சுருள் சிரை நரம்பு நோய்க்கான நவீன சிகிச்சை கருவி

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பொது அறுவை சிகிச்சை பிரிவில் சுருள் சிரை நரம்பு நோய்க்கான நவீன சிகிச்சை  அளிக்கும் கருவி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. 

கால்களில் உள்ள இரத்தக் குழாய்களில் ஏற்படும் நரம்பு சுருட்டு என்கிற சுருள் சிரை நரம்பு நோய்க்கு, அறுவை சிகிச்சை இல்லாமல் நவீன சிகிச்சை அளிக்கும் முறை தான், RFA கதிர்வீச்சு சிகிச்சை. இந்த சிகிச்சை முறையில்  பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய் வழியாக வடிகுழாய் செலுத்தப்பட்டு அதில் மெதுவாக வெப்பம் ஏற்படுத்தப்படும். இந்த வெப்பமானது பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய்களை செயலிழக்க செய்துவிடும். இந்த வகையில், இந்த சுருள் சிரை நரம்பு நோய் குணப்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்படுகிறது. தமிழகத்திலேயே 2வது முறையாக கோவை அரசு மருத்துவமனைக்கு பிறகு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் பொது அறுவை சிகிச்சை பிரிவின் அதிநவீன சிகிச்சை முறை தொடங்கப்பட்டுள்ளது.

Exit mobile version