பக்கவாத நோய்க்கு நவீன சிகிச்சை: அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் சாதனை

பக்கவாத நோய்க்கு நவீன சிகிச்சை அளித்து, புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா, வேலூரில் வசித்து வருபவர் ராஜ்குமார் . இவரது இடது கையும், காலும் திடீரென செயல் இழந்ததால், புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்த பொழுது, வலது பக்க மூளைக்கு செல்லும் பகுதியில் ரத்தம் குறைவாக காணப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்தின் ஆலோசனைப்படி, புதிய நவீன சிகிச்சை வழங்கப்பட்டது. ஒரு மணி நேரத்தில் அவரது உடலில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதோடு 3 நாட்களில் நடக்கவும் தொடங்கியுள்ளார். விரைவில் அவர் வீடு திரும்பவுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version