Modern கார்த்தி படங்களுக்கு வரவேற்பு இல்லையா?

சமீபத்தில் கார்த்தி நடித்து வெளிவந்த படம் தான் ‘தேவ்’. கலவையான விமர்சனத்தினை பெற்றுள்ள இந்த படம், கார்த்தியின் முந்தைய படங்கள் போல் வெற்றி படமாக அமையவில்லை என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கடைசியாக கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம், தீரன் அத்தியாயம் ஒன்று படங்கள் மெகா ஹிட்டானது. ஹட்ரிக் வெற்றி படமாக தேவ் படம் அமையும் என எதிர்பார்த்த நிலையில், படத்திற்கு போதுமான வரவேற்பு இல்லை.

கார்த்தி கிராமத்து இளைஞராக நடித்த மூன்று படங்களும் (பருத்தி வீரன், கொம்பன், கடைக்குட்டி சிங்கம்) மெகா ஹிட்டானது. ஆனால் ரிச்சான இளைஞராக நடித்த படங்களுக்கு (காற்று வெளியிடை, தேவ்) ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. நடுத்தர இளைஞராக நடித்த படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

குறிப்பாக, படும் லோக்கலாக நடித்த ஆயிரத்தில் ஒருவன் (முத்து), சிறுத்தை (ராக்கெட் ராஜா) கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் Modern மற்றும் ரிச்சான இளைஞராக நடித்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version