தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில், ஓரிரு இடங்களில் லேசானது முதல், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 25 முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.