வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தை பொருத்தமட்டில், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் 4 சென்டி மீட்டர் மழையும், சேந்தமங்கலம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 3 சென்டி மீட்டர் மழை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவேரிப்பாக்கம், செய்யாறு, திருத்தணி, விருதாச்சலம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை மற்றும் தமிழக உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.