எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் வசந்தகுமார்

நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை காங்கிரசின் எச். வசந்த குமார் ராஜினாமா செய்தார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எச். வசந்த குமார் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். இந்நிலையில், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட வசந்த குமார், தேர்தலில் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து தனது நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர், ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் தனபாலிடம் வசந்தகுமார் வழங்கினார். இதனால் நாங்குநேரி தொகுதிக்கு அடுத்த 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படவுள்ளது

Exit mobile version